LPG கேஸ் சிலிண்டருக்கான மானியம் மீண்டும் வருமா? மத்திய அமைச்சர் விளக்கம்!
ஜூலை 27.,
LPG கேஸ் சிலிண்டருக்கு 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டுமே 242 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மானியம் வழங்குவதில் சரிவு ஏற்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
சிலிண்டருக்கான மானியம்:
வீட்டு உபயோகத்திற்கான LPG சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால் சிலிண்டருக்கான (LPG) மானியம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா தொற்று காலகட்டத்தில், சிலிண்டருக்கான மானியம் வழங்கியது நிறுத்தப்பட்டது. ஆனால், அரசின் தரப்பில் இருந்து சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாத காரணத்தால், LPG சிலிண்டரின் வாடிக்கையாளர்கள் மானியம் வழங்கக்கோரி கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு ஒரு சிலருக்கு மட்டும் சிலிண்டருக்கான மானியம் வர ஆரம்பித்தது.
இதையடுத்து, சிலிண்டருக்கான முழு தொகையை கொடுத்து சிலிண்டர் வாங்கிய பிறகு, அந்த வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கே மானியத்தொகை செலுத்தப்படுகிறது. அதாவது, 2021-22 நிதியாண்டில் மட்டுமே LPG சிலிண்டருக்கான மானியமாக 242/- கோடி ரூபாய் வழக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மட்டுமே ரூ.23,464/- கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது என்றும், 2018-19ஆம் நிதியாண்டில் 37,209/- கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் 242/- கோடி ரூபாய் மட்டுமே மானியத்தொகையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் மத்திய அமைச்சர் விளக்கியுள்ளார். அதாவது, கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு 5 கோடி கேஸ் இணைப்புகள் இலவசமாக வழங்கலாம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனாலேயே, இந்த நிதியாண்டில் மானியம் வழங்குவதில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

.jpg)