Type Here to Get Search Results !

வருமான வரித்துறையில் வேலை: Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! #Incom_Tax_Department

வருமான வரித்துறையில் வேலை:  Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!



வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Inspector மற்றும் Tax Assistant பதவிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள்  31-08-2022 அன்று வரை பெறப்படவுள்ளது. எனவே, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். விண்ணப்பிக்கும் முறைகள் விண்ணப்பிக்க தேவையான தகுதி போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:


வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector பணிக்கு என்று  1 பணியிடமும், Tax Assistant பணிக்கு என்று 5 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Inspector and Tax Assistant கல்வி விவரங்கள் :


Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது  பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்கவேண்டும்.

நிறுவனம்Income Tax Department
பணியின் பெயர்Inspector and Tax Assistant
பணியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline

Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது  பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராகவும், ஒரு மணி நேரத்திற்கு 8,000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.


Inspector and Tax Assistant வயது விவரங்கள் :


Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சமாக 30 வயது வரை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது என்றும், அதிகபட்சமாக  27 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.


Inspector and Tax Assistant ஊதிய விவரங்கள் :


Inspector பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.


Tax Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.


வருமான வரித்துறை தேர்வு செய்யும் முறைகள் :


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.


வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :


விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்தப் பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 31-08-2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification and Application Link

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies