சென்னை ICF கோச் தொழிற்சாலையில் 876 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி நாள் !
சென்னையில் ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ICF) Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தகுதி உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை ICF வேலைவாய்ப்பு விவரங்கள்:
Carpenter – 87, Electrician – 188, Fitter – 208, Machinist – 63, Painter – 83, Welder – 245, Pasaa – 2 பணியிடங்கள் என்று மொத்தமாக 876 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு Fresher’s விண்ணப்பதார்களும் விண்ணப்பிக்கலாம்.
இதில், SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பதார்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதார்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வாளர்களுக்கு மாதம் ரூ. 6,000 – 7,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியனவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் நேரடி ஆன்லைன் ( https://pb.icf.gov.in/act/ ) மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

.jpg)






