மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: காலிப்பணியிடங்கள் 10,000... கல்வி தகுதி SSLC...
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையமானது, வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மூலம், காலியாக உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு அதன் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதியானவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம் காலிப் பணியிடங்கள் :
வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வார்டுகளில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு காலியாக உள்ள 10,000 பணிகளுக்கான தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம், கடலூர் |
| பணியின் பெயர் | Various |
| பணியிடங்கள் | More than 10,000 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.07.2022 |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
Job Fair கல்வி தகுதிகள் :
நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, 12ஆம் வகுப்பு, Graduation, Teacher Training, ITI, Diploma, BE என தேர்ச்சி ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் வயது வரம்புகள் :
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Fair ஊதிய விவரங்கள் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யும் தனியார் நிறுவனத்தின், விதிமுறைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் தேர்வு முறைகள் :
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் அடிப்படையில் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறைகள் :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவை செய்து கொள்ளவும். 30.07.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் 30.07.2022 தேதி அன்று காலை 9 மணி முதல் முகாமில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)