கண்ணான கண்ணே...கண்ணான கண்ணே..... என் மீது சாய வா ... | Kannaana Kanney... En Meedhu Saaya Vaa
பெற்ற மகளை பொக்கிஷமாக கருதுகிற அனைத்து தந்தையினருக்கும் இந்த பதிவு சமர்ப்பனம்..
இயற்கை எழிலோடு கோவிலாக காட்சியளிக்கும் இந்த இடம் பொள்ளாச்சியை அடுத்த எரிப்பட்டியில் தெய்வமாக வணங்கி வரும் ராஜேஷ் என்கிற திருவேங்கடத்தின் மகள் அபிராமியின் நினைவிடம் தான் இது.
பெற்ற மகளை பேணி காத்து வளர்க்கும் மகளை, ஒருநிலையில் திருமணம் செய்துகொடுப்பது அனைத்து தந்தையிருக்கும் கட்டாயமாகிறது.
ஆசை ஆசையாய் கட்டிக்கொடுத்த மகள் நன்றாக வாழவேண்டுமென்று எதையும் இழக்க துணிவார்கள் அப்பாக்கள். ஆனால், வரதட்சணை என்ற அரக்கனால் ஏற்படுகிற விபரீதத்தால் பெற்ற மகளை பிணமாக பார்க்கவேண்டிய துரதிஷடமும் ஏற்படுவது வாடிக்கையாகி போனது.
அப்படி இறந்தமகளை நினைத்து சிறிது காலம் துயத்தில் இருக்கும் பெற்றோர், காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி இயல்புநிலைக்கு மாற்றும்.
ஆனால், நீங்கள் பார்க்கும் இந்த அபிராமியின் தந்தை முற்றிலும் மாறுபட்டவர். தன் மகளுக்கு நினைவிடம் கட்டி, மகளின் ஆசைகளை தற்போதுவரை நிறைவேற்றி வருகிறார் ராஜேஷ் என்கிற திருவேங்கடம்.
தன் மகளுக்கு தோட்டமென்றால் அதிக விருப்பம். பறவைகளுக்கு தீவனம் வைப்பது, தெய்வபக்தி மிகுந்தவராக இருந்த பெண்தான் அபிராமி.
அபிராமி இறந்து 4 வருடங்கள் கடந்தது. மகள் இறப்பிற்கு பிறகு மகளின் நினைவிடத்தை கோவிலாக மாற்றி, தன் மகளையே தெய்வமாக வணங்கி வருகிறார் ராஜேஷ் என்கிற திருவேங்கடம்.
இப்போது நீங்கள் காணுகிற காட்சிகள் தினமும் பூஜைகள் நடக்கிறது. பெண்கள் பரவலாக அபிராமியை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
இன்று கார்த்திகை தீப திருநாள் என்பதால் மகளின் ஆலயத்தில் தீபம் ஏற்றி பூஜை செய்து வருகிறார் அபிராமியின் தந்தை. அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அந்த வாய்ப்பை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.

