Type Here to Get Search Results !

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா IAS நியமனம்

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா IAS நியமனம்



சென்னை  நவ.07., 


பல்வேறு இலாக்காவில் இருந்த பத்து ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலராக இருந்த கோபால் IAS  போக்குவரத்து துறை முதன்மை செயலராக நியமனம்.


பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அமுதா IAS ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலராக நியமனம்.




கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் IAS  நில நிர்வாகத்துறை முதன்மை ஆணையராக நியமனம்.


பொதுப்பணித்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா IAS நீர்வளத்துறை முதன்மைச் செயலராக மாற்றம்.


தொழில்த் துறை முதன்மை செயலராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலராக மாற்றம்.


நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த கிருஷ்ணன் IAS, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலராக மாற்றம்.


தயானந்த் கட்டாரியா IAS போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்தவர், தற்போது பொதுப்பணித்துறை முதன்மை செயலராக மாற்றம்.


ரமேஷ் சந்த் மீனா IAS தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராக இருந்தவர், தற்போது, எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக நியமனம்.


தர்மேந்திர பிரதாப் யாதவ் IAS எரிசக்தித்துறை முதன்மைச் செயலராக இருந்தவர், தற்போது, கைத்தறி துறை முதன்மைச் செயலராக நியமனம்.


செல்வி அபூர்வா IAS கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலராக இருந்தவர், தற்போது,  இளைஞர் நலத்துறை முதன்மைச் செயலராக நியமனம்.



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது அமுதா ஐ.ஏ.எஸ் சந்தித்திருந்தார். தமிழ்நாட்டிற்கு விரைவில் அவர் மாற்றப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவிக்காலத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, மீண்டும் தமிழ்நாடு திரும்பியுள்ளார். இதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது, ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக  நியமனம் செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies