பொள்ளாச்சி வழித்தடத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்
10ஆம் தேதி முதல் கோவை போத்தனுார்-பொள்ளாச்சி வழித்தடத்திலும், பொள்ளாச்சி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போத்தனுார்-பொள்ளாச்சி இடையே, 40 கி.மீ., அகல ரயில் பாதையில், தற்போது மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. போத்தனுார்-பொள்ளாச்சி வழித்தடத்தில், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் தற்போது, கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக பழையபடி ரயில்சேவை துவங்கப்படுகிறது.
கோவையில் இருந்து, வரும் 10ஆம் தேதி முதல் தினமும் மதியம், 2:10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06463), போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை ஸ்டேஷன்கள் வழியாக மாலை, 4:40 மணிக்கு பழநி அடைகிறது. 11ஆம் தேதி முதல் காலை பழநியில் இருந்து 11:15 மணிக்கு புறப்படும் ரயில் (06462), மதியம் 2 மணிக்கு கோவை சென்றடைகிறது.
10ஆம் தேதி முதல், பழநியில் இருந்து தினமும் மாலை 4:45 மணிக்கு புறப்படும் ரயில் (06479), இரவு 7:40 மணிக்கு மதுரை அடைகிறது. மதுரையிலிருந்து, 11ஆம் தேதி முதல் தினமும் காலை, 7:20 மணிக்கு புறப்படும் ரயில் (06480), காலை, 10:10 மணிக்கு பழநியை சென்றடைகிறது. கோவையில் இருந்து வரும் 13ஆம் தேதி முதல் தினமும் மாலை, 6:15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (06419), போத்தனுார், கிணத்துக்கடவு வழியாக இரவு, 7:45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைகிறது.
14ஆம் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் ரயில்(06420) காலை, 8:40 மணிக்கு கோவை செல்கிறது. 14ஆம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து காலை, 4:55 மணிக்கு புறப்படும் ரயில் (06731) பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் வழியாக காலை, 6:30 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து வரும், 13ஆம் தேதி முதல் இரவு, 8:50 மணிக்கு புறப்படும் ரயில்(06732), 10:30 மணிக்கு பாலக்காடு சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The 골든 리치 best online slots. We have all the slot 에이스 포커 games that we 1xbet download want to play. Slot machines 스포츠 토토 사이트 and 1xbet korean live dealer Slot Machines; Progressive Jackpots; Table Game