'ஜெய் பீம்': ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு என் சொந்த செலவில் வீடு - நடிகர் ராகவா லாரன்ஸ்
செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. பார்வதி அம்மாவிற்கு என் செலவில் வீடு கட்டிக்கொடுப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் "ஜெய் பீம்" திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டினர்.
'இருளர்' இனத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையினர் அவரை சித்திரவதை செய்து கொன்றனர். இதை கதையின் மைக்கருவாக வைத்து 'ஜெய் பீம்' திரைப்படம் உருவானது.
இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொது சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில், செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைப்பேச்சில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது.
வலைப்பேச்சாளர் ஜெ.பிஸ்மியிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவிற்கு என் செலவில் வீடு கட்டிக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளேன்.
ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு நன்றி். 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா, ஜோதிகா, இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் என பாராட்டியுள்ளார்.A house for Rajakannu’s family 🙏🏼 #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021


