Type Here to Get Search Results !

நான்தான் ஜெ.வின் மகள்: எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கு... விரைவில் சசிகலாவை சந்திப்பேன்... ஜெ., நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

நான்தான் ஜெ.வின் மகள்: எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கு..விரைவில் சசிகலாவை சந்திப்பேன். ஜெ., நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்


கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு ஓ.பி.எஸ் சிறிது காலம் முதல்வராகவும், அதன்பிறகு அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இருந்தார். சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் 2018 மே 8-ஆம் தேதி எடப்பாடிகே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 79 கோடி ரூபாய் செலவில், 9.09 ஏக்கரில் 50,422 சதுர அடி பரப்பளவில், அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், கடந்த 27.01.2021 அன்று திறக்கப்படட்டது.


இந்நிலையில், தீபாவளி  04.11.2021 அன்று கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த பிரேமா என்ற பெண், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். ஆனால், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பிரேமாவுக்கு  அனுமதி மறுத்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய பிரேமா, தீபாவளியான இன்று எங்க அம்மாவின் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். 



ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லாருக்கும் தெரியும் என்றார். இவ்வளோ நாட்களாக இங்கே வராமல் இன்றைக்கு ஏன் வந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சில காரணங்கள் இருக்கு என்று கூறினார். அம்மா அப்போலோ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நான் அப்போலோ மருத்துவமனையின் பின்பக்கம் சென்று அம்மாவை பார்த்தேன். என்னை அம்மாவின் உதவியாளர் (பிஏ) முத்துசாமின்னு ஒருவர் அம்மாவிடம் கூப்டு போனார். அம்மா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டார். அம்மா என் கையை பிடித்துக்கொண்டு அழுதாங்க, எனக்கும் அழுகை வந்தது அழுதேன். அதன்பிறகு பேபியா கூப்பிட்டுபோங்க என்று சொன்னாங்க நான் வந்துட்டேன். போயஸ் கார்டன் இல்லத்திலும் அம்மா ஜெயலலிதாவை ஒருமுறை சந்தித்துள்ளேன்.


அம்மா மறைந்தது என்னால் தாங்கமுடியவில்லை. நான் அதிக மனஅழுத்தமாக இருந்தேன். அதுதான் அம்மா நினைவிடம் வர இவளோ காலம் ஆனது. விரைவில் சின்னம்மாவை சந்திப்பேன். எனக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. நான்தான் அவங்க மகள் என்று நிரூபிக்க எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கு விரைவில் அதை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.     



ஜெயலலிதா நினைவிடத்தில் பிரேமா என்ற பெண்ணின் செயலால் சற்று நேரம் சலசலப்பு நிலவியது. இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அம்ருதா என்பவரும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தன் தங்கையின் மகள் என்று சொல்லி, ஜெயலலிதா யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்ததாகவும், தேவை என்றால் டிஎன்ஏ சோதனை எடுத்து பார்க்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies