Type Here to Get Search Results !

உனக்கு 15 எனக்கு 35: 10ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய திருமணமான பெண்!

உனக்கு 15 எனக்கு 35: 10ஆம் வகுப்பு மாணவனுடன் ஓடிய திருமணமான பெண்!
 




திருமணமாகி  35 வயதானா அங்கன்வாடி பெண் ஊழியருடன் 10ஆம் வகுப்பு படிக்கும்  பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


                       திருவாரூர் மாவட்டம் குடவாசல் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு-ராசாத்தி தம்பதிக்கு  பரத் 15 வயது என்கிற மகனும் சாரதி 13 வயது என்ற மகளும் பாரதி என்ற மகளும் உள்ளனர். அதே தெருவைச் சேர்ந்த கட்டிட வேலை செய்கின்ற பாலகிருஷ்ணன்-லலிதா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 13 வயதில் மகள் உள்ளார்.


            இந்தநிலையில், லலிதா தேதியூரில் இருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  அருகிலுள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பரத் 10ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். உனக்கு 35 எனக்கு 15 என்ற கணக்கில் பரத்துக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.  


             இவ்வளவு சிறிய வயதில் அவ்வளவு பெரிய பெண்ணுடன் என்னடா  பழக்கம் என்று பரத்தின் பெற்றோர் கண்டிக்கிறார்கள். இருவரும் ஒரே பகுதியில் இருந்தால், இந்த பழக்கம் தொடரும் என்று கருதி எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து பரத்தை படிக்க வைத்துள்ளனர். சித்தி வீட்டில் இருந்தபடியே பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். இருந்தாலும், லலிதாவுடன் பரத் தொடர்பில் இருந்திருக்கிறார். 


                 இந்தநிலையில்தான் கடந்த 26-ஆம் தேதியன்று பரத் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.   அன்றுதான், லலிதாவும் காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, பரத் காணவில்லை என்று தந்தை பாலகுரு எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருத்துவமேரி என்பவர் பரத்-லலிதா இருவரையும், பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரியவந்தது.


            இதையடுத்து, அழைத்துச் சென்ற  ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டோ டிரைவர் தனபால் கூறியபோது,  இருவரையும் பூந்தோட்டம் என்ற ஊரில் இறக்கிவிட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.  ஆட்டோ டிரைவர் தனபாலிடம் கிடைத்த  தகவலின் பேரில் போலீசார் 27ஆம் தேதியன்று லலிதா மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.  


                இதையடுத்து, அவர்கள் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால், லலிதாவின் செல்போன் சிக்னல் என்னை வைத்து அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிய போலீசார் முயற்சி செய்தனர். அதில், அவர்கள்  வேளாங்கண்ணியில் இருப்பதாக சிக்னல் காட்டியதால், வேளாங்கண்ணி சென்று தொடர் தேடுதலில் ஈடுபட்டதில்  அவர்களை பிடித்துவிட்டனர். 6  நாட்களுக்கு பின்னர் இருவரையும் பிடித்த போலீசார், மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு,  லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies