நீட் தேர்வில் பழங்குடியின மாணவி தேர்ச்சி..! கொண்டாடிய ஊர் மக்கள்!!
நீட் தேர்வில் கோவையை சேர்ந்த பழங்குடியின மாணவி 202 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி. மலசர் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி சங்கவிக்கு, சாதி சான்றிதழ் உட்பட எந்த ஆவணங்களும் இல்லாததால் சிரமப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு ஊடகங்களிலும் இந்த செய்தி வெளிப்படுத்தியது. இதையடுத்து, இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது.
மேலும், சங்கவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவுடன் மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இந்தநிலையில், சங்கவிக்கு படிக்க வைக்க சில தொண்டு நிறுவனங்களும் உதவிசெய்ய முன் வந்தனர். இதையடுத்து, மாணவி சங்கவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தப் பழங்குடியினர் கிராமத்தில் முதல்முறையாக மாணவி ஒருவர் மருத்துவ படிப்பு படிக்க செல்வது அந்த ஊர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.