தலைமை செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் காவலர் பலி!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகேவுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், N3 முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் கவிதா என்பவர் உடல்நசுங்கி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உடல்நசுங்கி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலர் முருகன் என்பவருக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பித்தார். அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் நேற்று இரவு முதலே விடியவிடிய மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகில் இருந்த தூங்குமூஞ்சி மரம் இன்று காலை வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதையடுத்து, மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், N3 முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து காவலர் (எண்: HC 27681) கவிதா என்பவர் உடல்நசுங்கி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த N1 ராயபுரம் போக்குவரத்து தலைமைக் காவலர் முருகன் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பித்தார். தலைமைக் காவலர் முருகனை 108 வாகனத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மரம் விழுந்ததில் பலியான கவிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். அதில், மகன் அருண்குமார் (23) சேலத்தில் உள்ள மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சினேகா பிரியா(18) பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் விஷால் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராயபுரம் போக்குவரத்து தலைமைக் காவலர் முருகன் மீதும் மரத்தின் கிளைகள் சரிந்து விழுந்ததில் அவருக்கும் தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காவலர் முருகனை உடனடியாக மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.