வால்பாறை பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பரிசு: பண்டிகையை கொண்டாட பொருட்கள் வழங்கிய மனிதநேயமிக்க போலீசார்
வால்பாறை நவ 02.,
வால்பாறை பழங்குடியின மக்களுக்கு போலீசார் தீபாவளி பரிசு வழங்கினர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சின்கோனா அருகே உள்ள செட்டில்மென்ட்டில் பழங்குடியின மக்கள் 25 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இதையடுத்து, நேற்று ( நவ 01) சின்கோனா (டான்டீ) ரயான்டிவிஷனில், செட்டில்மென்ட்டில் வசிக்கின்ற 25 குடும்பங்களும், தீபாவளி பண்டிகையை கொண்டாடும்விதமாக அனைவருக்கும் அரிசி, வேட்டி, சேலை, மற்றும் பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் போலீசார் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், பழங்குடியின மக்களுக்கு பாசத்தோடு வழங்கினார். வழங்கியதோடு பழங்குடியின மக்களிடம், ஆய்வாளர் கற்பகம் பேசுகையில், வருகிற தீபாவளியை முன்னிட்டு நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் என்பதே எங்களின் ஆசை. இன்று உங்களுடன் இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்.
உங்களுக்கு வருகின்ற எவ்வித பிரச்னைகள் ஆனாலும், தயங்காமல் காவல் நிலையத்தில் வந்து புகார் தெரிவிக்கலாம். வனம் காக்கப்பட வேண்டும். வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல், அவைகளை துன்புறுத்தாமல் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், என்றார்.
குழந்தைகளிடம் பட்டாசுகளை கொடுத்து வெடிக்க சொல்லும்போது பெற்றோர்களும் அருகில் இருக்கவேண்டும். வனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு தீபாவளியை கொண்டாடுகள்.
நடைபெற்ற நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், சவுரிமுத்து, இளங்கோ மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.