ஆளுநரின் வாகனம் செல்லும்போது பொதுமக்கள் பயணத்திற்கு தொந்தரவு செய்யக்கூடாது - ஆளுநர் மாளிகை
ஆளுநரின் வாகனம் செல்லும் போது பொதுமக்கள் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை இயக்குநருக்கு ஆளுநர் மாளிகை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஆளுநரின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கடந்த 6ஆம் தேதி அவரை ஆளுநர் மாளிகையில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, ஆளுநரின் வாகனம் செல்லும் போது பொதுமக்கள் பயணத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் என காவல் துறை இயக்குநர் உறுதி அளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.