Type Here to Get Search Results !

எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட தயாநிதி மாறன், கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து

எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட தயாநிதி மாறன், கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து



திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: திண்டிவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்துள்ளதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கனிமொழி குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இவ்வழக்கில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. 


மேலும் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்று வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து இன்று (நவ.8) உத்தரவிட்டார்.


இதேபோல் மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies