பசுமை தீபாவளி: வனவிலங்குகள், பறவைகளை அச்சுறுத்தும் பட்டாசு வேண்டாமே...
தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காற்றை பாசுபடுத்தும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அன்று நிகழும் மறுபக்கத்தையும் பார்ப்போம்; மாசற்ற பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நீர், நிலம், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான சப்தங்கள் மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு உள்ள முதியவர்கள் உடளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
மேலும், வனவிலங்குகள் வாழும் வனம் மற்றும் பறவைகள் அதிகம் வாழும் இடங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
ஏன்னென்றால், பலவகையான பறவைகள், யானைகள், குரங்குகள், சிறுத்தைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் என ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமான வனத்தில் வாழ்கிறது. தீபாவளி பண்டிகையின்போது காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிகமாக அதிரும் சப்தத்துடன் வெடிக்கப்படும் வெடிகளால் இந்த காட்டுயிர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும், தொடர்ச்சியாக எழும் வெடி சப்தங்களால் காட்டின் அமைதி சீர்குலையும், அதனால் ஏற்படும் விளைவுகளால், விலங்கினங்கள் அங்கும் இங்கும் ஓட துவங்கும். இதுபோன்ற சூழலில் அவற்றின் இயல்பான வழிதடம் மாறிவிடுகிறது. இதனால், காட்டை விட்டு வெளியேறி வரும் வனவிலங்குகள் மக்கள் வாழும் ஊருக்குள் நுழைந்து விடும் ஆபத்துகளும் நிகழும். ஆனால் நாம் என்ன சொல்கிறோம் வனவிலங்குகள் இன்னும் சொல்லப்போனால், மேலே சென்று வெடிக்கும் ராக்கெட் போன்ற பட்டாசுகளால் அடர்ந்த காடுகளில் காட்டுத்தீயை உருவாக்கா அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க மலையடிவாரங்கள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்போம். மேலும், காட்டுத்தீ பரவும் வகையிலான பட்டாசுகளை கண்டிப்பாக தவிர்க்குமாறும் உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாமில்லை. வனவிலங்குகள்தான் நம் மனித இனத்தை பாதுகாத்து, மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. விலங்குகளை நாம் பாதுகாக்கவேண்டிய அவசியமில்லை. வனவிலங்குகளின் அழிவுக்கு நாம் காரணமாக இல்லாமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும்.
பசுமையான இயற்கைகளும் வனவிலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழல்களே, மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட வனவிலங்குகளை பாதுகாப்பதையும், அவற்றிற்கு எதிரான செயல்களை தவிர்ப்பதும், அவற்றின் வாழ்விடங்களை காப்பதுடன் வனவிலங்கினங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படவேண்டும்.
அன்பு உறவுகள் பசுமையை பேணிக் காப்பதற்கு பசுமை தீபாவளியை கொண்டாடுவோம். மனிதனின் ஒருநாள் மகிழ்ச்சிக்கு காட்டுயிர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தவிப்போம், இயற்கையை நேசிப்போம். அனைவருக்கும் பசுமை தீபாவளி வாழ்த்துக்கள்...