நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் !
நடிகர் ரஜினிகாந்த் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி காவேரி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
நடிகர் ரஜினிக்கு தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கே, அவருக்கு 4 நாட்களாக 5வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் வைத்து மருத்துவக்குழு சிகிச்சை அளித்தது.
இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் ரஜினிக்கு தலைசுற்றல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, கழுத்துபகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும், ஒருசில தினங்களில் அவர் வீடுதிரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்திற்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ரத்தஓட்ட சீரமைப்பு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து சிறப்பு மருத்துவகுழுவினர் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று (அக்.31) இரவு நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய புகைப்படத்தை ஹூட் (hoote) செயலியில் வெளியிட்டுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் தனது புகைப்படத்துடன், தனது குரலில் தான் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் பேசியிருந்தார். அத்தோடு, தான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல்உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.