திவான்சாபுதூர் ஊராட்சி அவ்வளவு எளிதில் திமுகவிடம் வரவில்லை. அதற்கும் கடின உழைப்போடு மக்களுக்கு அங்கே என்ன தேவை, மக்களுக்கான தேவையறிந்து தேர்தலுக்கு முன்பே செயல்பட்டதன் காரணமாக, தற்போது வெற்றிக்கனியை அப்பகுதி மக்கள் திமுகவிடம் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டு காலமாக இன்பவேல் என்ற அந்த அற்புத மனிதனுக்கு மக்கள் கொடுத்த பெரும் ஆதரவே அதிமுக 25 ஆண்டு காலம் அந்த ஊராட்சியை வழிநடத்த காரணமாக இருந்தது.
அந்தப் பெரிய மனிதர் அய்யா இன்பவேல் இறப்புக்கு பிறகு வந்த அரசியல் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறையில்லாமல், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பணிகளில் அதிகப்படியாக இருந்ததாக அந்தப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
குறிப்பாக, 4வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் மட்டமில் ஒன்று இயங்கி வந்தது. தொழில்ரீதியாக அந்த பகுதி மக்கள் மட்டமில்லில் பணிபுரிந்தாலும், மட்டமில்லிருந்து காற்றில் பறக்கும் தேங்காய் நார் துகள்களால் அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அதிகம். அவர்கள் குடிக்கும் தண்ணீர், வீட்டிற்குள் தேங்காய் நார் துகள்கள் என பல இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சனை குறித்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தலைமையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அந்த மட்ட மில்லில் உரிமையாளர் சச்சுதானந்தம் அவர்களுடன் சுமுகமாகப் பேசி அதற்கும் தீர்வும் கண்டனர்.
இன்னும் குறிப்பாக இந்த வெற்றிக்கு பலம் சேர்க்கும் வகையில் மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த மருத்துவர் மகேந்திரன் அவர்களும், அதிமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனைமலையின் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் திமுகவில் இணைந்தது கோவை மாவட்ட அரசியலில் திமுகவிற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்தது. மருத்துவர் மகேந்திரனை பற்றி சொன்னால் உலகம் அறிந்த பிரபலம் கமலஹாசனை பட்டிதொட்டியெங்கும் அரசியலில் அடையாளம் காட்ட உழைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமாரை பற்றி சொன்னாள் அவரிடம் எந்த பணியை கொடுத்தாலும் அதில் மக்கள் நலன் இருக்குமானால் அதையை எப்பாடுபட்டாவது செய்து முடித்து வெற்றி காண்பார். அதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.
தற்போது வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு அதிமுகவால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட டி.கே.அமல் கந்தசாமி அவர்களை வால்பாறை தொகுதி பட்டித்தொட்டியெங்கும் உள்ள மக்களுக்கு அடையாளம் கொடுத்து அவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய எந்த பலனும் எதிர்பார்க்காமல் மக்களிடத்தில் அவரை கொண்டு சேர்த்தவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார். இதையும் யாரும் மறுக்க முடியாது. பலரை பதவியின் உச்சாணியில் அமரவைத்து அழகு பார்த்தவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார். அதற்கு முன்பு வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் கஸ்தூரி வாசு அவர்களையும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்புக்கு உறுதி செய்தவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் என்பது மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.
தற்போது மருத்துவர் மகேந்திரனும் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமாரும் திமுகவில் இணைந்து பணியாற்றியது திவான்சாபுதூர் ஊராட்சியில் வெற்றிபெற திமுகவிற்கு மேலும் பலம் சேர்த்தது.
திவான்சாபுதூர் ஊராட்சியை பொருத்தவரை திமுக தனது பிரசார வியூகத்தை சிறப்பாக அமைத்து. கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் தலைமையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணைச்செயலாளர் மருத்துவர் மகேந்திரன், முன்னாள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஆனைமலை வடக்கு செயலாளர் கன்னிமுத்து, ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ் தேவசேனாதிபதி, ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் மற்றும் திமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு பொறுப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் ஒன்று கூடி இணைந்து செயல்பட்டதால் இந்த வெற்றியை சுவைத்திருக்கிறார்கள்.
அதிமுகவின் செயல்பாடுகளை அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை மக்கள் யார் விரும்பவில்லை என்பதற்கான விடையாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. அதிமுகவில் வரும் காலங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போலிகளை கலைந்து, உண்மையாக உழைக்கும் தொண்டர்களை உயர்வுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது.
எம்ஜிஆர் ஆட்சியை பார்த்திருக்கிறோம், ஜெயலலிதா ஆட்சியை பார்த்திருக்கிறோம், கருணாநிதி ஆட்சியை பார்த்திருக்கிறோம் ஆனால், தற்போது இருக்கும் திமுக ஆட்சியாது முற்றிலும் மாறுபட்ட, புத்துயிர் பெற்ற திமுகவை காணமுடிகிறது. தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஐந்து மாதங்களில் கஜானா காலியாக இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றைய தினத்திலிருந்து அரசு அதிகாரிகள் நியமிப்பது, அமைச்சர்கள் நியமிப்பது என்று அனைத்துமே திறமையானவர்களை அறிவாளிகளை தமிழ்நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறார். தற்போது மக்களின் பேச்செல்லாம் இன்னும் திமுக ஆட்சி பத்து பதினைந்து வருடங்கள் மக்களின் பேராதரவோடு செயல்படும் என்று தெரு தெருவுக்கு மக்கள் முணுமுணுக்கிறார்கள்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆனாலும் அமைச்சர் பெருமக்களே ஆனாலும் அதிகாரிகள் உள்பட அனைவரையும் எளிதில் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது திமுக அரசு என்பதில் மாற்று கருத்தில்லை.
எது எப்படியானாலும் மக்கள் நலனில் அக்கறையோடு இயற்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வண்ணம், வனவிலங்குகளை பாதுகாக்கக்கூடிய மிக பெரிய பொறுப்புடன், பெண்கள் பாதுகாப்பில் உறுதித் தன்மையுடன் ஆட்சி செய்தாலே மக்களால் போற்றப்பட்டு பாராட்டுவார்கள் என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கு நிகழ்ந்ததை ஞாபகப்படுத்துகிறேன்.
பொள்ளாச்சி, வால்பாறைவாழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நடந்தேறினாள் பொள்ளாச்சி மாவட்டம் திமுக கோட்டையாக மாறும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.




















