தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று கூறினார். மேலும், தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன் என்றும் கூறினார். இந்நிலையில், திரைபிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ரஜினி அவர்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற திரைவானின் சூரியன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தனது ட்விட்டரில், " திரைவானின் சூரியன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) October 25, 2021
திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!