தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் - நடிகர் விஜயகாந்த்! #DadasahebPhalkeAward
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நடிகரும், தேமுதிக பொதுச்செயலாருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று கூறினார். மேலும், தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன் என்றும் கூறினார்.
இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் @rajinikanth அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.#DadasahebPhalkeAward
— Vijayakant (@iVijayakant) October 25, 2021