வால்பாறை நகரத்திற்குள் வாகனங்களுக்கு இடையே கால்நடைகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை புல்வெளிகள் இருக்குமிடத்தில் அனுப்பாமல் நகரத்துக்குள் அனுப்புவதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட காரணமாகிறது. அதோடு இல்லாமல் வாயில்லா ஜீவன்களான கால்நடைகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது. வால்பாறை நகராட்சி நிர்வாகமும் காவல்துறையினரும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கண்டிக்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க, அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வால்பாறை நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.
