அக்.09.,
கோவை மாவட்டம் வால்பாறையில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட
பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பது குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, புதுதோட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான இயேசு(52), என்பவர் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இந்தநிலையில், இயேசுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, இயேசுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, இதற்கான உத்தரவை சிறையில் இருக்கும் இயேசுவிடம் வழங்கப்பட்டது.
