தருமபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கியது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு தொணி.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தொணி சார்பாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏழைஎளிய மக்களுக்கு பேருதவியாக இருந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கி பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தருமபுரி மாவட்டம் அரூரில் இயங்கி வரும் தீபம் தொண்டு நிறுவனம் ஏழைஎளிய மக்களுக்கு உதவும்விதமாக உணவுப்பொருட்கள், முககவசம், சானிடைசர் போன்றவை வழங்கியதோடு, இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் தன்னார்வலர்கள் காவல்துறை, மற்றும் மருத்துவதுறையுடன் இணைந்து சேவையாற்றினார்கள்.
தீபம் தொண்டு நிறுவனத்தின் மூலமாக அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சுமார் 3,00,000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள், முககவசம், சானிடைசர் போன்றவை ஏழைஎளிய மக்களுக்காக வழங்கப்பட்டது. இந்த சேவைக்காக தீபம் தொண்டு நிறுவனத்தை கௌரவிக்கும் விதமாக ஏற்காட்டில் நடைபெற்ற தர்மபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு தொணி சார்பாக விருது வழங்கி பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
மக்களுக்கு சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கு நீதியரசர் திரு.ராஜாராம் அவர்கள் விருது வழங்கி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
இதுபற்றி தீபம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கற்பகவல்லி பேசுகையில், எங்கள் தீபம் தொண்டு நிறுவனத்திற்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்திய தர்மபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொணி கூட்டமைப்பிற்கு தீபம் நிறுவனம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் தொண்டு நிறுவனம் துவங்கி மக்கள் பணியாற்றி வருகிறோம். இந்த விருதும் பாராட்டும் எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.



