கோவை மாவட்டம் வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக விற்பனை செய்ய பதுக்கியவர் கைது.
வால்பாறை காமராஜ் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தாஸ் (46), என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், தாஸிடம் 1கிலோ 300கிராம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 1கிலோ 300கிராம் கஞ்சா பறிமுதல் செய்து தாஸை போதை பொருள் பதுக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்தனர்.

