நான்கு நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்த கனமழையால், மலை ரயில் செல்லும் பாதையில் இரு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதான் காரணமாக, மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான ரயில் சேவை, கடந்த நான்கு நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, மண்சரிவுகளை அகற்றி, இருப்பு பாதைகளை சீரமைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். சீரமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், வழக்கம்போல் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு மலை ரயிலில் பயணித்தனர்.



