சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். பணியில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை மாநகரக காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் உள்ள வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனே அருகிலிருந்த காவலர்கள், காவல் ஆணையரின் சொந்த வாகனத்தில் காவல்துறை அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.