Type Here to Get Search Results !

வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும் - தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் கொரோனா கட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். 

அந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது, சமுதாய கூட்டங்கள் திறப்பது, அரசியல் கூட்டங்கள் நடப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

நடத்தப்பட்ட ஆலோசனையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.



இதற்கு முன்னர், வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே கோயில்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது வெள்ளி, சனி, ஞாயிறுகளிலும் கோயில்களை திறக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என  கூறியிருந்தது.

இந்நிலையில், கோயில்களை திரைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்படுள்ளது. அத்தோடு அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies