சாயமிட்ட பிரிண்டிங் துணிகளை காவிரி ஆற்றில் சுத்தமாக துவைத்து எடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பதிய வேண்டும் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஈரோட்டிலிருந்து சாய பிரிண்டிங் போட்ட வேட்டி சேலைகளை காவிரி ஆற்றில் அலசுவதற்கு நாமக்கல் மாவட்ட சமய சங்கிலி என்ற இடத்தில் இரவு நேரங்களில் சாயமிட்ட துணிகளை சுத்தமாக அலாசி எடுத்து சென்றுள்ளனர்.அந்தப் பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்த ஆற்று நீரில் சாயமிட்ட துணிகளை அலாசி சென்று உள்ளார்கள்.
இதனால், எங்களுக்கு நோய் பரவும் அபாயமாக உள்ளது என பொதுமக்கள் சாயமிட்ட துணிகளை கொண்டுவந்த வாகனங்களை சிறைபிடித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்கள் அப்பகுதி மக்கள். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தகவலறிந்து உடனே வந்தனர். அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்த மூன்று வாகனங்களை பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சாயக்கழிவு நீர் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் கேன்சர், தொழுநோய் நோய் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்ட நிலையில், ஈரோடு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், கேன்சர் நகரமாக மாறி வருகிறது என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .