கனவுகளின் நாயகன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
முன்னாள் குடியரசு தலைவரும் கனவுகளின் நாயகன் அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாள் இன்று, ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அமைத்துள்ள அவரது நினைவிடத்தில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கனவுகளின் நாயகன் விண்வெளி விஞ்ஞானியான அப்துல் கலாம், கடந்த 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
தனது பதவிக்காலம் முடிந்த பிறகும், மாணவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த அவர், ஷில்லாங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறப்பு என்பது இளைஞர்களுக்கும் இயற்கைக்கும் பேரிழப்பு.
இதையடுத்து, கலாமின் உடல் அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பரமக்குடியில், அப்துல் கலாமின் உருவப்படத்தை 250 கிலோ நாட்டு உப்பில் வரைந்து அசத்தியுள்ளனர்.