தங்களிடம் மாயக் கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் என்று கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் 1லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர்.
தேனியில் காண்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி இருப்பதாககூறி நூதனமுறையில் மோசடியில் ஈடுபட்ட ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். 1லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி அருகே உள்ளது உப்புகோட்டை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து, திவாகர். அரசமுத்து, திவாகர் ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து தங்களிடம் மாயக் கண்ணாடி இருப்பதாகவும், அதனை கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் எனவும் கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் 1 லட்சம் ரூபாய்க்கு விலை பேசிவுள்ளனர்.
அரசமுத்து, திவாகர் ஆகிய இருவரின் பேச்சை நம்பிய யுவராஜ், தன் நண்பர்களான மதன், சீனிவாசன், வரதராஜன் ஆகியோரிடம் விபரத்தை கூறியுள்ளார். ஆர்வத்துடன் நான்கு நபர்களும் காரில் மாயக்கண்ணாடியை வாங்க 1 லட்சம் ரூபாய் பணத்துடன் தேனி வந்துள்ளனர். இவர்களை தொடர்பு கொண்ட அரசமுத்து, திவாகர், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு அருகே வரும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி, அவர்களும் அங்கு வந்த யுவராஜிடம் 1 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட அரசமுத்து, திவாகர், கண்ணாடி ஒன்றை கொடுத்துவிட்டு வேகமாக சென்றுள்ளனர்.
ஆனால், அந்த கண்ணாடி, முதியவர்கள் அணியும் சாதாரண வகைக் கண்ணாடி என்பதை அறிந்த யுவராஜ், தனது நண்பர்களுடன் அரசமுத்து, திவாகர் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காக விரட்டியுள்ளனர். இதையடுத்து, அரசமுத்து மட்டும் பிடிபட்டார். பணத்துடன் திவாகர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
அரசமுத்துவை பெரியகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த யுவராஜ், தன்னை எப்படி ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பெரியகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பணத்துடன் தப்பியோடி, தலைமறைவாக உள்ள திவாகரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.