வால்பாறையில் அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் 16வது வார்டு வார்டில் அதிமுக ஐம்பதாவது ஆண்டு பொன்விழா கொடியேற்று கொண்டாடப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 17.10.2021 அன்று 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
இதையடுத்து,பொன்விழாவை கொண்டாடும்விதமாக இன்று வால்பாறையை அடுத்த சோலையார் 16-வது வார்டு வார்டில் அதிமுக கொடியேற்று விழா கொண்டாடப்பட்டது. விழா வால்பாறை நகர இலக்கிய அணி செயலாளர் பெஸ்ட் பெரியசாமி தலைமையில் வார்டு செயலாளர் ராம்குமார் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு இணைப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில் அதிமுக கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



