வால்பாறை அக் 06.,
வால்பாறையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதாக கடந்த 3ஆம் தேதி வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அதன் ஒரு பகுதியாக வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் இன்று சட்ட விழிப்புணர்வு கூட்டம் சட்ட பணிகள் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. சட்ட தன்னார்வ பணியாளர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.
இதுபற்றி வழக்கறிஞர் விஸ்வநாதன் பேசியபோது; இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், வால்பாறை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் வால்பாறை பகுதியில் 45 இடங்களில் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அனைத்து மக்களுக்கும் சட்டங்கள் பற்றிய விபரங்கள் போய் சேர வேண்டும். குறிப்பாக குழந்தைகள் திருமண சட்டம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்தும், வன்முறை தொடர்பான சட்டம் குறித்தும், மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சட்டம் குறித்தும் விளக்கமாக பேசினார். கூட்டத்தில் வழக்கறிஞர் ஆர்.ஆர். பெருமாள், சட்ட தன்னார்வ பணியாளர்கள் சுரேஸ், முனியாண்டி, மூர்த்தி உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.


