வால்பாறை அக் 06.,
வால்பாறையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வால்பாறை நகர மற்றும் சுற்றியுள்ள பகுதி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா, என வால்பாறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வால்பாறை நகரில் பகுதி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, என வால்பாறை நகர பகுதிகளில் நேற்று போலீசார் சோதனையிட்டனர்.
மேலும், மளிகை கடைகளில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கும் நிலையில், நேற்று போலீசார் அதிரடி சோதனை செய்தனர். ஆனால், புகையிலை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இருந்தாலும் போலீசார் திடீரென சோதனை நடத்தியதால் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்விதமாக இருந்தது.
இதுகுறித்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் கூறுகையில், வால்பாறையிலுள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. உத்தரவை மீறி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த அதிரடி சோதனையில் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.




