Type Here to Get Search Results !

நடிகர் திலகத்திற்கு கூகுள் அளித்த கௌரவம்: . பிறந்தநாளில் 3 கெட்டப்களில் டூடுல் வெளியீடு..!!


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய கௌரவம் ஒன்றை அளித்துள்ளது. 


தமிழ் சினிமாவின் முகமாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,  இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.   ஒரேநேரத்தில் நவரசத்தையும் காண்பிக்கக்கூடிய திறமையான ஒரே நடிகர்.



சிவாஜியின் நடிப்பில் வெளியான மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், ராஜ ராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் ரொம்பவே பிரபலமானவை. எந்தவொரு  கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடிய திறமைக்கொண்டவர்.  செவாலியர் பட்டம் பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமை சிவாஜிக்கு உண்டு. இதேபோல்,  பல தேசிய விருதுகளை பெற்றவர்  சிவாஜி. இவர்,  கடந்த 2001ஆம் ஆண்டு மறைந்தார்.



கடந்த 1928ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்த சிவாஜியின் பிறந்தநாள் விழாவை, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவாஜியின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக  சிவாஜியின் புகைப்படம் கூகுள் டூடிலில் இடம்பெற்றுள்ளது. உலகளவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போற்றும் வகையில் கூகுள் இதை வெளியிட்டுள்ளது. இதற்கு சிவாஜியின் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 



நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இந்த கூகுள் டூடுலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்ரம் பிரபு தனது ட்வீட்டில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் அன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் இந்தியாவுக்கும், இந்த  கூகுள் டூடுலை உருவாக்கிய நூபூர் சோக்ஸிக்கும் எனது நன்றி. அவரை இன்றும் நேசிக்கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் அவரது இழப்பின் வலி கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies