Type Here to Get Search Results !

வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர பணி நியமனம்: அமைச்சர் ராமச்சந்திரன் #Anti_hunting_guards

கோவை செப் 30.,

வனத்துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர பணி நியமன ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது- அமைச்சர் ராமச்சந்திரன்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21 பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்,  21 பயனளிகளுக்கு மாவட்ட தொழில் மையம், சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, வேளாண் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 35,57,000 ரூபாய்கான காசோலைகளை வழங்கினார். 


இதையடுத்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சின் காரணமாக, கொரோனா தொற்று வெகுவாக குறைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்சநிலையில் இருந்தபோது, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதின் காரணமாக வெகுவாக கட்டுப்படுத்தபட்டுள்ளது. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கும் கீழ்  உள்ளது.



தமிழ்நாட்டில் அனைத்துத்  துறைகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த பணியை செய்து வருகிறார். மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக பல லட்சம் பேர் பலனடைந்துள்ளனர். அதில் ரத்தக் கொதிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகளவில் பலனடைந்துள்ளனர். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தப்பட்டு  எல்லாப் பகுதிகளிலுமே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து பாதுகாப்பான  நடவடிக்கைகள் முன்னேற்பாடுகளும் எடுக்கபட்டுள்ளது.


பத்து ஆண்டுகளுக்கு மேலாக வனத் துறையில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி  ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. வனத்துறைக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


ஒன்றிய அரசின் நிதியை கடந்த அதிமுக ஆட்சியில் பெறாமல் விட்டு விட்டதாகவும் தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளோம். வனவிலங்குளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் ஒன்றரை மாதத்தில் வழங்கப்படும். வனவிலங்குளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அகழி அமைப்பது மற்றும் சோலார் வேலி அமைக்க எவ்வளவு தூரத்திற்கு அமைக்க வேண்டும் என்பது குறித்த கணக்கு வன அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies