கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே இன்று காலை கரடி தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார்.
இதையடுத்து, கரடி கடித்ததில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. விவசாயி சிவப்பாவின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதி மக்கள் ஓடிச்சென்று, கரடியை விரட்டியடித்தனர். அதன்பின்னர், விவசாயி சிவப்பாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வேப்பனப்பள்ளி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் ஒற்றை காட்டு யானை தாக்கி 2க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். இதனால் அந்த பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது விவசாயி சிவப்பாவை கரடி தாக்கிய சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை அதிகரித்துள்ளது.


