கோவை மாவட்டத்தில் அதிமுகவிற்கு இறங்குமுகம்: அதிமுக பொறுப்பாளர்களோடு திமுகவில் இணைந்தார் A.R.V.சாந்தலிங்ககுமார்
அதிமுக கோவை புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் A.R.V.சாந்தலிங்ககுமார் திமுகவில் இணைந்தார்.
அதிமுக கோவை புறநகர் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர். பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர். த.சரவணன் திமுகவில் இணைந்தார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட M.G.R.இளைஞரணி இணைச்செயலாளர் S.S.யுவராஜ்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் ரா.அமுதகுமார் திமுகவில் இணைந்தார்.
ஆனைமலை மேற்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர்/ பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் V.அகிலை சுரேஷ்குமார் திமுகவில் இணைந்தார்.
ஆனைமலை மேற்கு ஒன்றிய M.G.R. இளைஞரணி பொருளாளர் M.கோபிநாத் திமுகவில் இணைந்தார்.
ஆனைமலை மேற்கு ஒன்றிய M.G.R.இளைஞரணி இணைச்செயலாளர் குமார்.எ.குமரேஷ் திமுகவில் இணைந்தார்.
ஆனைமலை மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் V.ராஜமாணிக்கம் திமுகவில் இணைந்தார்.
ஆனைமலை ஒன்றிய அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் R. காளிமுத்து திமுகவில் இணைந்தார்
நான் மக்கள் பணியாற்றவே அரசியலுக்கு வந்தேன்..
முத்தமிழறிஞர் கலைஞர் அரசியலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசியலும் இருவருக்கிடையே அரசியல் போட்டிகள் நிலவினாலும் மக்களுக்கான திட்டத்தை அரசியல் சட்ட ரீதியாக நிறுவி மக்கள் பணியாற்றினார்கள்.
அதற்குப் பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடையே அரசியல் போட்டிகள் இருந்தாலும் மக்கள் நலனுக்காக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் பணியாற்றினார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்று அதிமுக பொறுப்பாளர்கள், கடந்த 4 ஆண்டுகளில் புரட்சித்தலைவி அம்மாவால் நிராகரிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது..
அதுமட்டுமல்ல கடந்த ஆட்சியில் அமைச்சர் பெருமக்கள் செய்த ஊழலுக்கு கட்சித் தொண்டர்களாகிய நாங்கள் ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது. கோடி கோடியாய் இவர்கள் கொள்ளையடிக்க நான் என்றும் துணைபோக முடியாது.
ஊழலுக்கு பின்னால் கடந்த ஆட்சியாளர்களோடு இருப்பதைவிட, ஊழலை கண்டறிந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வரும் தற்போதைய சாதனையாளர்களோடு மக்கள் பணியாற்றவே விரும்புகிறேன்.
புரட்சித்தலைவி அம்மாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும் ஒரு ஆளுமை மிக்க தலைவரின் கட்டுப்பாட்டிலிருந்த கொடநாடு எஸ்டேட்டுக்கு பாதுகாப்பு இல்லையெனில் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் தளபதி அவர்கள் சிறந்த அதிகாரிகளை நியமித்து சிறந்த திட்டங்களை வழிவகுத்து மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறார்.
அவரோடு திமுகவில் இணைந்து மக்கள் பணியாற்றிட நான் முன் வந்துள்ளேன். எனது அரசியல் பயணம் மக்கள் நலன் காக்கும் திமுகவுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் பெருமையும் கொள்கிறேன்.

