6 மாதத்திற்கு பிறகு பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்பட்டுகிறது.
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்ததின் காரணமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல இடைக்கால தடையை வனத்துறையினர் விதித்திருந்தனர். மேலும் வால்பாறை செல்லக்கூட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரனா வைரஸ் தொற்று குறைந்த வரும்நிலையில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் ஆணை பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.
மேலும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை, சோலையாறு, திருமூர்த்தி அணை, ஆழியாறு அணை, ஆழியார் பூங்கா, கவி அருவி, டாப்சிலிப், மற்றும் வால்பாறையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத்தலங்கள், குரங்குநீர் வீழ்ச்சி தடை அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒப்புதலோடு மேற்குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், வால்பாறை செல்லும் வழிபாதைகளில் வனவிலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி செல்லக் கூடாது.
அதேபோல், மது மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும்.
மேலும், டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்லவும், யானை சவாரி செய்ய அனுமதி இல்லையென்றும் அதாவது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதிகுள் சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க 30 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தகவல் தெரிவித்தார்.
