Type Here to Get Search Results !

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து,  உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியில் அவைத்தலைவராக இருந்த மூத்த தலைவர் மதுசூதனன். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் இருந்தது. மதுசூதனனுக்கு வயது 80 ஆகிறது. கடந்த காலங்களில் மதுசூதனன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்தநிலையில், மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம்  திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசமானது. மேலும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடனும் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிரித்து ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா அணியிலிருந்த மதுசூதனன் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.மதுசூதனனுக்கு முதல் முறையாக கைத்தறி துறை அமைச்சராகவும்  ஆனார். அதிமுக கட்சியில் அவைத்தலைவராக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்தவர் மதுசூதனன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற  மூத்த முதல் உறுப்பினர் மதுசூதனன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies