வால்பாறை நகராட்சி ஆணையர் மீது தற்காலிக பெண் ஊழியர் புகார் | Valparai Municipal Commissioner
வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மீது அங்கே தற்காலிகமாக பணிபுரியும் சுமிதா ஶ்ரீ என்ற பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் பேசியதாகவும் அலுவலக உதவியாளரை அழைத்து தன்னை கையை பிடித்து இழுத்துவந்து வெளியே தள்ளிவிட்டதாகவும், கீழே தள்ளியதில் தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் சுமிதா ஶ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், மயக்கமடைந்து இருந்தபோது தன்னை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறினார்.
வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை D.S.P. திரு. சீனிவாசன், காவல் ஆய்வாளர் திருமதி. கற்பகம் புகார் கொடுக்கப்பட்டது. சுமிதா ஶ்ரீயிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் விசாரிப்பதாக தெரிவித்ததாக கூறினார். சுமிதா ஶ்ரீயுடன் வால்பாறை வழக்கறிஞர் மா.விஸ்வநாதன் உடனிருந்தார்.
