ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி கோவில் உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் தரிசனம் செய்ய தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்ட அறிக்கையில், தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் வழக்கம்போல பூஜைகள் மேற்கொள்வர் என்றும் தெரிவித்துள்ளர். மேலும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் திருவிழாக்கள், குடமுழுக்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
அத்தோடு , கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிப்பது, சோப்பு, கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்ற அரசின் நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டார்.



