Type Here to Get Search Results !

பட்டா மாறுதலுக்கு 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

கோவை ஆகஸ்ட் 25.,
கோவையில் பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.3,500 லஞ்சம் வாங்கிய புகாரில் வெள்ளானைபட்டி கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்படடார்.

கோவை மாவட்டம்,  இடிகரை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக வெள்ளானைபட்டி கிராம நிர்வாக அலுவலர் குமார் என்பவரிடம் விண்ணப்பித்து உள்ளார். ஆனால், அவர் சாக்குபோக்கு கூறி பட்டா மாறுதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் குமாரிடம் கேட்டபோது, ரூ.3,500 லஞசம் கொடுத்தால் உடனடியாக பட்டா மாறுதல் செய்துதருவதாக கூறி உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பால்ராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அப்போது, கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பால்ராஜிடம் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும்படி கூறினார். அதன்படி, நேற்று மாலை வெள்ளானைப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் சென்ற பால்ராஜ், தான் வைத்திருந்த ரூ.3,500 பணத்தை விஏஓ குமாரிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் குமாரை கையும், களவுமாக கைதுசெய்தனர்.

கோவை கணபதியை சேர்ந்தவர் கிராம நிர்வாக அலுவலர் குமார். வெள்ளானைப்பட்டி கிராமத்திற்கு பணியிட மாற்றம் ஆகி 15 நாட்களே ஆன நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதானதால் அவர் கதறி அழுதார். இது கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies