கோவை முழுவதும் திமுகவினர் பராசக்தி ஹீரோ டா என்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோவை மாநகர் முழுவதும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பராசக்தி ஹீரோ டா என்று திமுகவினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல் பேச்சை பதிவு செய்ததை பாரட்டும் விதமாக சட்டமன்றத்தில் கன்னிப்பேச்சு யாரு? பராசக்தி ஹீரோ டா என்று கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர் கோவை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கடந்த 18-ஆம் தேதி முதல்முதலாக தன்னுடைய கன்னி பேச்சை சட்டப்பேரவையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்தார்.
இதையடுத்து, தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார் உதயநிதி ஸ்டாலின். மேலும் பேசுகையில், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றிக்கு உதவிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தனித்தனியாக நன்றி தெரிவித்தார்.
மேலும், பல்வேறு விசயங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியதுடன் மிக முக்கியமான தமிழக பிரச்சனைகள் குறித்தும் பேசினார். இவற்றை பாரட்டும் விதமாக திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
