சென்னை ஜூலை 07.,
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கம் வாய்ப்பு இயக்குனர் பிரபு ராஜ சோழனுக்கு கிடைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் பிரபு ராஜ சோழன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக அந்நியன், சிவாஜி, இந்தியன்2 ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவான முதல் படம் கருப்பம்பட்டி.
தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போகும் வாய்ப்பு இயக்குனர் பிரபு ராஜ் சோழனுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த முழு நீள நகைச்சுவை திரைப்படம் தில்லு முல்லு போன்றே முழு நீள காமெடி படமாக தற்போது உருவாகும் புதிய திரைப்படமும் இருக்குமாம்.
ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் எதிரிகளிடம் சொல்லும் பன்ச் டயலாக் ஒன்று வரும். கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்களா தான் வரும்!! இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் பிரபு ராஜ் சோழன். இந்த பன்ச் டயலாக் இதன் வாரிகள் எதை உணர்த்துகிறது என்றால், ஒருவனுக்கு நல்ல குழு இருந்தாலும், அவனுடைய தனிதன்மை வாய்ந்த குணநலன்கள் மட்டுமே அவனை போரில் சிறந்து செயல்பட வைக்கும். நம்பிக்கையும் சொல்லிய வாக்கும், தொழில் முனைவோனின் முக்கிய அம்சங்கள். போராட்டங்களும் தோல்விகளும் தொழில் முனைவோர் வாழ்க்கையின் ஒரு பங்காகும்; ஆனால் ஒருவனுக்கு அவன் மேல் இருக்கும் தன்னம்பிக்கை தான், அவனின் நிகழ் கால பயணத்தை வாழ்க்கை அனுபவமாக மாற்றும் என்பதை சொல்கிறது.




