சேலம் மாவட்டத்தில் அதிமுக கட்சி சார்பில் 450 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ 4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி சார்பாக கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து சேலம் மாவட்டத்திலுள்ள 450 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக கட்சி சார்பாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ரூ 4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார் இதில் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மணி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

