Type Here to Get Search Results !

ஓபிஎஸ்ஸுக்கு ஆண்மையில்லை...! சசிகலா காலில் விழுவார் – சராமரி விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன்!

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆண்டிபட்டி எம்எல்ஏவாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன்.  அந்த சமயத்தில் டான்சி வழக்கினால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சராகி மீண்டும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, அதிமுக கோட்டையான ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார். 


2001-ஆம் ஆண்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானாலும் ஜெயலலிதாவுக்காக தங்க தமிழ்ச்செல்வன் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக நேற்று முன்னாள் துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.



நேற்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து  கவனஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குறித்து விமர்சித்துப் பேசினார். பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசிய ஓபிஎஸ், முன்னாள் அதிமுக புள்ளி இந்நாள் திமுக பிரபலமான தங்கதமிழ்ச்செல்வனை தாக்கி பேசினார். அதாவது ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்ய, அப்போதைய எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தயங்கியதாகவும், அவரை ஒரு நாள் இரவு முழுவதும் நான் உள்ளிட்டோர் பேசி சமாதானம் செய்தாகவும் கூறினார்.


இதைக் கேட்டு கொந்தளித்த தங்க தமிழ்ச்செல்வன் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார். அப்போதைய சபாநாயகர் காளிமுத்துவையும், என்னையும் அழைத்த அம்மையார் ஜெயலலிதா என்னை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல் நான் எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். 


மேலும் ராஜினாமா செய்யும் விஷயம் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என அம்மையார் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால், எனது மனைவி மற்றும் உறவினர்களுக்குக் கூட நான் தெரியப்படுத்தவில்லை. மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த பிறகுதான் நான் ராஜினாமா செய்தது ஏன் குடும்பத்திற்கே தெரியும். என்னை ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் செய்ததாகவும் கூறியிருப்பது தவறு. அவருடைய ரகசியங்கள் ஒவ்வொன்றையும் நான் விரைவில் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.


இச்சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ஓ.பன்னீர்செல்வத்தை  சராமரியாக விமர்சித்தார். அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், சசிகலா காலில் ஓ.பன்னீர்செல்வம்  விழப்போவது உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தேர்தலுக்கு முன் பிரச்சாரம் செய்யும்போது தேனியில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தான் தீர்மானிக்கும் என்றார். 



இன்று சசிகலாவை மிக கடுமையாக எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம் அன்று ஏன் சசிகலாவை சேர்க்க மாட்டோம் என உறுதியாக சொல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆண்மை இருந்திருந்தால் சொல்லியிருப்பார். அதிமுகவை சசிகலா மீண்டும் கைப்பற்றினால், சசிகலா காலில் ஓ.பன்னீர்செல்வம்  தஞ்சமடைவார் என்பது உறுதி அதுதான் உண்மை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies