வால்பாறை வட்டம், சின்கோனா பகுதியில் வால்பாறை நகராட்சியால் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு, பல இடங்களில் பேருந்து பயணிகளுக்காக பயணிகள் நிழல் குடைகள் கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சின்கோனா முதல் சின்னக்கல்லார் வரையிலான சில நிழல் குடைகள் மறு புனரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், பெரியகல்லார், 5 வது டிவிசன் மற்றும் ரயான் டிவிசன் பகுதிகளில் உள்ள பயணிகள் நிழல் குடைகள் மட்டும் எவ்வித புனரமைப்பும் செய்யப்படவில்லை. அந்த நிழல் குடைகள் தற்போது மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இது சம்மந்தமாக பல முறை நகராட்சிக்கு கோரிக்கை வைத்தும் இது நாள் வரை இந்தப் பகுதி நிழல் குடைகள் எவ்வித புனரமைப்பும் செய்யப்படால் இருக்கிறது. குறிப்பாக 5 வது டிவிசன் பகுதியில் அமைந்துள்ள பயணிகள் நிழல் குடை கட்டியது முதல், கூரை மிகவும் பலவீனமாக உள்ளது. மழை காலத்தில் மழைநீர் கூரை வழியே உள்ளே வருகிறது. எந்த நேரத்திலும் அந்த நிழல் குடை உடைந்து விழும் நிலையில்இருக்கிறது. இதனால் எதிர் பாரத உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது சம்மந்தமாக வால்பாறை நகராட்சி ஆணையாளர் சிதிலமடைந்து பயணிகள் நிழல் குடைகளை சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.




