முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகிய 4 பேரும் முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு தனிச்செயலாளர்களில் முதன்மை அந்தஸ்தில் உள்ள உதயச்சந்திரன் முதலமைச்சரின் முதலாவது தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலகம் சென்று தனது பணிகளை கவனிக்கத்தொடங்கி இருக்கும் நிலையில், முதலமைச்சருக்கு நான்கு தனிச்செயலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் தனி செயலாளர்களாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட இருக்கிறார்கள் என்றும், முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக தொல்லியல் துறை ஆணையராக இருக்கும் உதயசந்திரன், அருங்காட்சியக்கத்தின் ஆணையர் எம்.எஸ்.சண்முகம், தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உமாநாத் ஆகிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வந்தன.
தற்போது தலைமைச்செயலாளராக உள்ள ராஜீவ் ரஞ்சன் 6 மாதத்தில் ஓய்வு பெற இருப்பதால், அவர் மாற்றபட வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல், அண்ணா மேலாண்மை நிர்வாகத்தின் ஆணையராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ் அவர்களை தலைமைச்செயலளராக நியமிக்கபட வாய்ப்பிருப்பதாகவே பேச்சு எழுந்தது.
இந்நிலையில், அதே மூன்று அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனிச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக, அனு ஜார்ஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



