தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகவும் திமுகவின் மூன்றாவது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக்கொண்டார்கள். சென்னை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவை கலந்துகொண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அண்ணா நினைவிடம், மு.கருணாநிதி நினைவிடம், கோபாலபுரம் இல்லம் என சென்று வந்த மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு விரைந்தார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று முதல் தனது முதலமைச்சர் பணியை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
1. ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகையாக ரூபாய் 4,000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதல் தவணையாக ரூபாய் 2,000/- வீதம் மே மாதத்திலேயே வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக 4,000/- ரூபாய் நிவாரண தொகையில் இருந்து, மே மாதமே முதல் தவணையாக 2,000/- ரூபாய் வழங்கப்படம்.
2. கொரோனா நோய்த்தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.
3. ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மே 16 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
4. சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்.
5. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின் மூலமாக பொதுமக்களின் புகார்களுக்கு 100 நாளில் தீர்வு




