தமிழகத்தில் முதன்மையான ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார் என்ற முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். அவரது சொந்த சேனலான சாணக்யாவில் அலசல் முடிவுகள் காணக் கிடைக்கின்றன. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் திரும்பவும் வரலாம் அல்லது ரிவஸ்ரில் நடக்கலாம் என்று சொல்லி பகீர் கிளப்பியிருக்கிறார். அந்த முடிவுகளைக் காணலாம்.
சென்னை மண்டலம்:
சென்னையைப் பொறுத்தவரை திமுகவின் கோட்டை என்றே சொல்லலாம். ஓரிரு தொகுதிகளில் மட்டுமே அதிமுக கைப்பற்றும். அந்த வகையில் ரங்கராஜ் பாண்டேவின் அலசலில் அதே நிலைதான் தொடர்கிறது. திமுக கோட்டையை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கிறார்.
சென்னையில் உள்ள 18 தொகுதிகளில் திநகர், விருகம்பாக்கம், ஆர்கே நகர், மைலாப்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் அதிமுகவிற்கும், அதேபோல் சென்னை தொகுதிகளில் திமுகவே கைப்பற்றும். அதில் அமைச்சர் D.ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம், வேளச்சேரி, அண்ணாநகர் ஆகிய தொகுதிகள் இழுபறியில் இருக்கின்றன.
வடக்கு மண்டலம்:
தமிழ்நாட்டில் வடக்கு மண்டலம் மிகப் பெரியது. இந்த பகுதியை பார்ப்போம். இங்கே திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்களை உள்ளடக்கியது. 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை உள்ளடக்கியது. வடக்கு மண்டலத்தில் எப்போதுமே திமுக வலுவாகவே இருக்கும். அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் திமுகவின் கையே ஓங்குகிறது.
ஆவடியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தோல்வியடைய வாய்ப்பிருக்கிறது. திருவண்ணாமலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விழுப்புரத்தில் சமபலத்துடன் திமுக நிற்கின்றன. வடக்கு மண்டலத்தில் அதிமுகவைவிட சொற்ப இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.
மேற்கு மண்டலம்:
மேற்கு மண்டலம் குறித்து பெரிய அறிமுகம் தேவைப்படுவதில்லை. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக 1996-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறது.
மத்திய மண்டலம்:
தமிழ்நாட்டில் சிறிய மண்டலம் மத்திய மண்டலம். இது டெல்டா மண்டலம் என்றும் வர்ணிக்கப்படும். மத்திய மண்டல தொகுதிகள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவாட்டங்கள் சேர்த்து. டெல்டாவை திமுகவின் சின்ன கோட்டை என்று சொல்லலாம். மீண்டும் ஒருமுறை அது நிரூபித்திருக்கிறது ரங்கராஜ் பாண்டேவின் அலசலில்.
தென் மண்டலம்:
தென் மண்டலத்தில் எப்போதும் அதிமுகவே ஆதிக்கம் செலுத்தும். அன்மை காலமாக, திமுகவும் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இதில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இதில் அடக்கம். போடியில் ஓ.பி.எஸ் தப்பி பிழைக்கிறார். காரைக்குடியில் ஹெச்.ராஜா தோல்வியடைய வாய்ப்பு.
அதேபோல், திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜபாளையத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமியும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதனும் மண்ணை கவ்வுகிறார்கள்.
அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 9 தொகுதிகளை தவிர்த்து திமுக 15 இடங்களைக் கைப்பற்றுகிறது. இழுபறியில் 2, அதிமுகவுக்கு 7 தொகுதிகள். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கிளைமேக்ஸ் பார்ப்போம்… ஆளப்போவது யாரு?
தமிழ்நாட்டில் மண்டலம் வாரியாக பார்த்ததில் இறுதியாக, திமுக கூட்டணி சொற்ப இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இந்தநிலையில், அதிமுக கூட்டணி 97 இடங்களிலும், திமுக கூட்டணி 111 இடங்களிலும் முன்னிலை பெறுகிறது. இதில் இழுபறியில் 26 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 26 தொகுதிகள் எந்தக் கூட்டணி பக்கம் வெற்றியாகிறதோ, அந்தக் கூட்டணி வெற்றிவாகை சூடும் என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார். அந்த 26 தொகுதிகளும் அதிமுக பக்கம் சாய்ந்தால் 2016-ஆம் ஆண்டு தேர்தலைப் போல மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது.
அதேபோல், அந்த 26 தொகுதிகளும் திமுக பக்கம் சாய்ந்தால் அதே 2016 தேர்தல் முடிவுகள் ரிவர்ஸில் வர சாத்தியமுள்ளது. இப்போது வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருப்பது போல் அதிமுக இருக்கும். ஆளும் இடத்தில் திமுக இருக்கும். இரு கூட்டணிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் நிலையில், சிறிய அளவில் திமுக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. மக்களின் தீர்ப்பு எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் அனைவரும் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்!











